ஏலம் மணக்கும் போடியில், ஏழை, எளிய மாணவர்களின் கல்வி நலனைக் கருத்தில் கொண்டு 1919ஆம் ஆண்டு 2 ஆசிரியர்கள், 20 மாணவர்கள் மட்டும் ஆதாரப்பள்ளியாக தொடங்கப்பட்ட இப்பள்ளி, 1962ஆம் ஆண்டு நிரந்தர அங்கீகாரத்துடன் கூடிய சவுண்டீஸ்வரி நடுநிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டு கல்விப் பணியினை செவ்வனே ஆற்றி வருகிறது. தன்னுடைய சிறந்த நிர்வகத்தாலும், தனிப்பட்ட செயல்பாடுகளாலும் 2011-12ஆம் கல்வியாண்டில் சிறந்த பள்ளிக்கான தமிழக அரசின் மாநில விருதினை மாண்புமிகு கல்வி அமைச்சர் அவர்களின் பொற்கரங்களால் பெற்றது.
பள்ளியானது 1999ஆம் ஆண்டு போடிநாயக்கனூர் சேனைத்தலைவர் சமுதாயத்தினரால் உருவாக்கப்பட்ட சேனைத்தலைவர் கல்வி அறக்கட்டளையின் கீழ் நிர்வகிக்கப்பட்டு வருகின்றது. பள்ளி நிர்வாகக் குழுவின் தலைவராக மதிப்புமிகு திரு.S.ஜெகஜோதி அவர்களும் , செயலராக மரியாதைக்குரிய திரு.S.M.இரமேஷ் என்ற இராமசுப்ரமணியன் அவர்களும் இருந்து வருகின்றனர். மேலும் போடிநாயக்கனூர் சேனைத்தலைவர் மகாஜன மத்திய சங்கத்திற்கு கட்டுப்பட்ட மேலத்தெரு, S.S.புரம், கஸ்பா, மற்றும் காந்திநகர் பகுதி சங்கங்கள் உறுதுணையாக இருந்து வருகின்றது.மேலும் வாசிக்க...
தலைவர்
வையத்தில் வாழ்வாங்கு வாழ வேண்டும், அதுவே மானுடபிறப்பின் பண்பும் பயனுமாகும். முறைப்படி வாழ்வதற்கு துணையாகவும், தூண்டுகோலாகவும் இருப்பது நல்ல எண்ணங்களும், நற்செயல்களாகும். நல்ல எண்ணங்களை வளர்ப்பதற்கு, வித்தாகவும், மேலும் வாசிக்க...
செயலர்
உலகம் தோன்றி, அதில் உயிர்கள் உருவாகி, உயரினத்தில் உயர் பிறப்பாய் மனித இனம் மலர்ந்து, அது மாண்புமிக்க இனமாய் மாறவும், பகுத்தறிவு பெறவும் பள்ளிகள் அவசியம். இன்றைய காலத்தில் பண்புகளுடன் பாடங்களை கற்பிப்பது அவசியமாகிறது மேலும் வாசிக்க...
தலைமையாசிரியர்
உள்ளத்தில் புதைந்து கிடக்கும் அறியாமையை களைந்து, அதில் அறிவை நிரப்புவதே கல்வி. அதனை செவ்வனே செய்து வருவது எங்கள் பள்ளி. நாங்கள் பாடங்களை மட்டும் கற்று தருவதில்லை, அதனுடன் பாடங்கள் கற்கும் ஆர்வத்தையும் கற்றுத் தருகிறோம். மேலும் வாசிக்க...
Sowndeeswari Middle School,
21,Santhai pettai Street
Near Head Post office,
Bodinayakanur - 625513.
Theni (Dt.)
+91 8754774689
+91 9994877468
sowndeeswari@gmail.com
All Rights Reserved