மாணவர்கள், மற்றும் ஆசிரியர்கள் பயன்படுத்துகின்ற வகையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள் பள்ளி நூலகத்தில் உள்ளது. மாணவர்களிடம் புத்தகங்கள் வாசிக்கும் பழக்கத்தை மேம்படுத்திட தனியாக பாடவேளைகள் ஒதுக்கப்பட்டு வாசிப்பை நேசிக்க கற்றுத்தரப்படுகிறது.
பள்ளியில் அதிக தொழில் நுட்பத்துடன் கூடிய Smart Class உள்ளது. இதனை அனைத்து மாணவர்களும் முழுமையாக பயன்படுத்துகின்றனர். இணையதள வசதியுடன் கூடிய Smart Class என்பதால் மாணவர்களுக்கு தேவையான அத்தனை பாடங்களும் உடனுக்குடன் இணையதளம் மூலம் பெறப்பட்டு தெளிவுபடுத்தப்படுகிறது.
பள்ளியில் இலவச பேருந்து வசதி செய்யப்பட்டுள்ளது. வெளியூரிலிருந்து வரும் மாணவர்கள் கட்டணம் ஏதும் இல்லாமல் வந்து பயனடைகின்றனர்.
மாணவர்களுக்கு ஆண்டு தோறும் வினாடி வினா போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டு கெளரவிக்கப்படுகின்றனர். ஒவ்வொரு மாணவர்களையும் ஆண்டு முழுவதும் கண்காணித்து அவர்களுடைய செயல்பாடுகளிள் சிறப்பாக உள்ள மாணவர்களை கௌரவிக்கும் வகையில் பரிசுகள் ஆண்டு இறுதியில் மிகப்பெரிய விழாவில் வழங்கப்படுகின்றது. நல்ல பண்புகளை வளர்க்கும் கருத்தரங்குகள் ஆண்டு முழுவதும் நடத்தப்பட்டு வருகிறது. மாணவர்கள் தேர்தல் ஜனநாயக முறைப்படி நடத்தப்பட்டு மாணவர்கள் தலைவர் தேர்ந்தெடுக்கப் படுகின்றனர். ஒவ்வொரு விழாக்களும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் ஈடுபாட்டுடன் சிறப்பாக நடத்தப்படுகிறது.
Sowndeeswari Middle School,
21,Santhai pettai Street
Near Head Post office,
Bodinayakanur - 625513.
Theni (Dt.)
+91 8754774689
+91 9994877468
sowndeeswari@gmail.com
All Rights Reserved