About Us

அறிமுகம்

ஏலம் மணக்கும் போடியில், ஏழை, எளிய மாணவர்களின் கல்வி நலனைக் கருத்தில் கொண்டு 1919ஆம் ஆண்டு 2 ஆசிரியர்கள், 20 மாணவர்கள் மட்டும் ஆதாரப்பள்ளியாக தொடங்கப்பட்ட இப்பள்ளி, 1962ஆம் ஆண்டு நிரந்தர அங்கீகாரத்துடன் கூடிய சவுண்டீஸ்வரி நடுநிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டு கல்விப் பணியினை செவ்வனே ஆற்றி வருகிறது. தன்னுடைய சிறந்த நிர்வகத்தாலும், தனிப்பட்ட செயல்பாடுகளாலும் 2011-12ஆம் கல்வியாண்டில் சிறந்த பள்ளிக்கான தமிழக அரசின் மாநில விருதினை மாண்புமிகு கல்வி அமைச்சர் அவர்களின் பொற்கரங்களால் பெற்றது.

நிர்வாகம்

பள்ளியானது 1999ஆம் ஆண்டு போடிநாயக்கனூர் சேனைத்தலைவர் சமுதாயத்தினரால் உருவாக்கப்பட்ட சேனைத்தலைவர் கல்வி அறக்கட்டளையின் கீழ் நிர்வகிக்கப்பட்டு வருகின்றது. பள்ளி நிர்வாகக் குழுவின் தலைவராக மதிப்புமிகு திரு.S.ஜெகஜோதி அவர்களும் , செயலராக மரியாதைக்குரிய திரு.S.M.இரமேஷ் என்ற இராமசுப்ரமணியன் அவர்களும் இருந்து வருகின்றனர். மேலும் போடிநாயக்கனூர் சேனைத்தலைவர் மகாஜன மத்திய சங்கத்திற்கு கட்டுப்பட்ட மேலத்தெரு, S.S.புரம், கஸ்பா, மற்றும் காந்திநகர் பகுதி சங்கங்கள் உறுதுணையாக இருந்து வருகின்றது.

ஆசிரியர்கள்

பள்ளியில் ஒரு பட்டதாரி நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியரும், பட்டதாரி ஆசிரியர்கள் 4 பேரும்,10 இடைநிலை ஆசிரியர்களும், ஒரு கைத்தொழில் ஆசிரியரும், மொத்தம் 16 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர்.

மாணவர்கள்

இங்கு கல்வி பயில போடி நகரைச் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து அதிகமான மாணவ, மாணவியர்கள் பயின்று வருகின்றனர். தற்போது பள்ளியில் 4௦௦ மாணவ, மாணவியர்கள் வரை பயின்று வருகின்றனர்.

கற்பித்தல் பணி

பள்ளி, மாநிலத்தின் மற்ற பள்ளிகளிலிருந்து முற்றிலும் மாறுபட்ட கற்பித்தல் பணியினை மேற்கொள்கிறது. பாடங்கள் மட்டுமே இங்கு நடத்தபடுவதில்லை. இங்கே பயிலும் மாணவர்கள் ஒவ்வொருவருக்கும் அவர்களின் தனித்திறன் மேம்படுத்தப்படுகிறது. குறைகள் கண்டறியப்பட்டு களைந்தெடுக்கப்படுகிறது. கற்றல் ஒரு மகிழ்ச்சியான செயல்பாடாக செயல்படுத்தப்படுகிறது. நாட்டின் கலாச்சாரம், பண்பாட்டின் முக்கியத்துவம் போற்றப்படுகிறது. போட்டிகளை எதிர்கொள்ளும் தன்னம்பிகை வளர்க்கப்படுகிறது. தேர்வுகளை எதிர்நோக்கும் நுணுக்கங்கள் கற்றுத்தரப் படுகிறது. கற்பித்தலின் தொழில் நுட்பங்கள் தொடர்ந்து பயன்படுத்தப்பட்டு வருகிறது. இப்பள்ளியில் பயிலும் ஒவ்வொரு மாணவர்களும் பட்டை தீட்டப்பட்ட வைரங்களாக ஜொலிக்க வேண்டும் என்பதே எங்கள் இலக்கு.

" எங்கள் பள்ளியின் நூற்றண்டுப்பாதையில் இந்த இணையதள முயற்சி இன்னுமொரு மைல் கல். "

திரு.S.ஜெகஜோதி

தலைவர்

வையத்தில் வாழ்வாங்கு வாழ வேண்டும், அதுவே மானுடபிறப்பின் பண்பும் பயனுமாகும். முறைப்படி வாழ்வதற்கு துணையாகவும், தூண்டுகோலாகவும் இருப்பது நல்ல எண்ணங்களும், நற்செயல்களாகும். நல்ல எண்ணங்களை வளர்ப்பதற்கு, வித்தாகவும், வேராகவும் இருப்பது உயர்ந்த குணங்களும், சிறந்த கல்வியும் ஆகும். இத்தகைய கல்விப் பணியை 1919ஆம் ஆண்டிலிருந்து சிறப்பாக செய்து வரும் நம் சவுண்டீஸ்வரி நடுநிலைப் பள்ளி, தன் சேவையை நூறு ஆண்டுகளாக தொடர்ந்து கொண்டிருக்கின்றது. ஏழை, எளிய மாணவர்களுக்கான கல்விச் சேவைதனை கடவுளுக்கு செலுத்தும் காணிக்கையாக செய்து வருகிறது சேனைத்தலைவர் சமூகம். சமூக பாகுபாடின்றி அனைவருக்கும் தரமான கல்வியையும், சிறந்த பண்பையும் கற்றுத்தருவதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம்.

நன்றி ! வணக்கம் !

திரு.S.M.இராமசுப்ரமணியன் B.A.,

செயலர்

உலகம் தோன்றி, அதில் உயிர்கள் உருவாகி, உயிரினத்தில் உயர் பிறப்பாய் மனித இனம் மலர்ந்து, அது மாண்புமிக்க இனமாய் மாறவும், பகுத்தறிவு பெறவும் பள்ளிகள் அவசியம். இன்றைய காலத்தில் பண்புகளுடன் பாடங்களை கற்பிப்பது அவசியமாகிறது. எங்கள் பள்ளி பண்புகளுடன் பாடங்களையும், அன்புடன் கண்டிப்பையும் கலந்து, நூற்றாண்டாய் தனது கற்பித்தல் பணியினை தன் கடமையாக செய்து வருகிறது. தன்னுடைய சிறப்பான செயல்பாடுகளாலும், அன்பான அணுகுமுறையாலும், மாணவர்களின் மனதினைப் படித்து, அதற்கேற்ற கல்வியை அவர்களுக்கு அளித்து நன்மக்களாக, நாட்டுபற்று மிக்கவர்களாக, தனித்திறன் பெற்றவர்களாக, தன்னம்பிக்கை வளர்த்து, எதிர்காலத்தினை எவ்வித தயக்கமுமின்றி எதிர்கொள்ளும் கல்வியினை நாங்கள் அளித்து வருகிறோம். நூற்றாண்டு கடந்தாலும், புதுப்பொலிவோடு எங்களை தினமும் புதுப்பித்து கல்வியினை புதுமையாய் புகுத்துகின்றோம். மாணவர்கள் தன்னுடைய இலக்கை நோக்கி பயணிக்க ஏற்ற வாகனமாய் எங்களை மாற்றிக் கொண்டிருகின்றோம்.

நன்றி ! வணக்கம் !

திரு.ஆ.சதீஸ்குமார் B.Sc.,M.A.,M.Phil.,B.Ed.,

தலைமையாசிரியர்

உள்ளத்தில் புதைந்து கிடக்கும் அறியாமையை களைந்து, அதில் அறிவை நிரப்புவதே கல்வி. அதனை செவ்வனே செய்து வருவது எங்கள் பள்ளி. நாங்கள் பாடங்களை மட்டும் கற்று தருவதில்லை, அதனுடன் பாடங்கள் கற்கும் ஆர்வத்தையும் கற்றுத் தருகிறோம். பண்பை மட்டும் கற்றுத் தருவதில்லை, பண்பால் விளையும் பயன்களையும் கற்றுத் தருகின்றோம். ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு ஆண்டும் மாணவர்களை புதுமைகளோடு அணுகுகின்றோம். தேடல் என்பதை மாணவர்களின் மனதில் பதியச் செய்கிறோம். கற்பித்தலில் புதுமை, தனித்திறன் மேம்பாட்டில் தனிக்கவனம், அன்பான அரவணைப்பு, மகிழ்வான வகுப்பறை, சிந்தனை தூண்டும் கற்றல், செயல்வடிவில் உணர்த்தப்படும் கல்வியறிவு, பாரம்பரியம் போற்றும் மாண்பு, நாட்டுப்பற்று இவையனைத்தையும் மாணவர்களுக்கு புகுத்தி, ஓர் உன்னதமான எதிர்காலத்திற்கு ஒளி ஏற்றுவதே எங்கள் தலையாய பணி, கடமை. "தன் சுத்தம் மேம்படுத்தி, கல்வியை எளிமையாக்கி, வகுப்பறைச் சூழலை மகிழ்வாக்கி, அடிப்படைக் கல்வியை வலுவாக்கி திறன்கள் பல பெற்ற மாணவர்களை உருவாக்குவதே எங்கள் இலட்சியம்" என்பதை எங்கள் குறிக்கோளாக்கி கடமையினை செம்மையாக செய்து வருகின்றோம்.

நன்றி ! வணக்கம் !

நிர்வாகக்குழு உறுப்பினர்கள்

 • திரு.S ஜெகஜோதி
 • திரு.S.M.இராமசுப்ரமணியன்
 • திரு.S.K.முருகேசன்
 • திரு.S.M.S.தனசேகரன்
 • திரு.R.அங்குவேல்
 • திரு.K.K.பிச்சை
 • திரு.V. சந்திரசேகரன்

செயற்குழு உறுப்பினர்கள்

 • திரு P. ஆதிநாராயணன்
 • திரு M. ராஜேந்திரன்
 • திரு. K.S.சக்திவேல்
 • திரு. A.சுகுமாா் என்ற பெருமாள்
 • திரு.K.K.கிருஷ்ணன்
 • திருK.T.இரத்தினவேல்
 • திரு.S.பாஸ்கரன்
 • திரு.P.ஆறுமுகம்
 • திரு.P.S.பிச்சை
 • திரு.R.நாகமணி
 • திரு.R.கந்தசாமி
 • திரு.டாக்டா் S.தா்மராஜ்
 • திரு..S.K.A.ஹிாிஷ்குமாா்
 • திரு.U.S.இரவிச்சந்திரன்
 • திரு.M.மாதவன்
 • திரு.S.K.தங்கராஜ்
 • திரு.K.P.S.மாாிமுத்து
 • திரு.G.முருகேசன்
 • திரு.B.சந்தோஷ்குமாா்
 • திரு.R.நம்பிக்கை நாகராஜ்
 • திரு.P.பரமராஜ்
 • திரு.E.சண்முகசுந்தரம்
 • திரு.A.முருகேசன்
 • திரு.K.ஆண்டிவேலு
 • திருமதி.A.மீனலோசினி
 • திரு.A.பிரபு
 • திரு.S.முருகன்
 • திரு.A.மனோகரன்
 • திரு.R.பாண்டியன்
 • திரு.டாக்டா் S.சிவக்குமாா்
 • திரு.T.G.மணிகண்டன்
 • திரு.M.பிரேம்சந்தா்
 • திரு.K.காா்த்திகேயன்

பொதுக்குழு உறுப்பினர்கள்

தலைமையாசிரியர்

 • திரு.ஆ.சதீஸ்குமார் B.Sc.,M.A.,M.Phil.,B.Ed.,

பட்டதாரி ஆசிரியர்கள்

 • திருமதி கி.ரேவதி M.A., M.Ed., (வரலாறு)
 • திருமதி து.விநோதா M.Sc.,M.Phil.,B.Ed., (கணிதம்)
 • திருமதி சா.ரோஸ்லீன் ஷீலா M.Sc.B.Ed., (அறிவியல்)
 • திருமதி அ.இலட்சுமி M.A.,B.Ed., (தமிழ்)

தொழில் ஆசிரியர்

 • திருமதி மு.வாணி B.Lit.,T.T.C.,

இடைநிலை ஆசிரியர்கள்

 • திருமதி இரா.மார்கிரேட் விமலா D.T.Ed.,
 • திருமதி த. முத்துலட்சுமி D.T.Ed.,
 • திருமதி கா.மணிமேகலை D.T.Ed.,
 • திருமதி தி.பிரேமாவதி M.A.,B.Ed.,D.T.Ed.,
 • திருமதி பா.ஜெயக்குமாரி M.A.,B.Ed.,D.T.Ed.,
 • திரு மா.முருகேசன் M.A.,M.A.,B.Ed.,D.T.Ed.,
 • திருமதி செ.ரெஜினாதேவி M.A.,B.Ed.,D.T.Ed.,
 • திருமதி சு.இலட்சுமி M.A.,B.Ed.,D.T.Ed.,
 • திருமதி சே.கிருஷ்ணவேணி D.T.Ed.,
 • திருமதி சு.கயல்விழி D.T.Ed.,

  Address

Sowndeeswari Middle School,

21,Santhai pettai Street

Near Head Post office,

Bodinayakanur - 625513.

Theni (Dt.)

  Contact

+91 8754774689

+91 9994877468

  Email

sowndeeswari@gmail.com

All Rights Reserved